1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (18:53 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ரஜினியின் 165வது படத்தின் டைட்டில் 'பேட்ட' என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரஜினியின் கேரக்டர் பெயரும் இதுவாகத்தான் இருக்கும் என கருதப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார்.