ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 11 ஜூலை 2018 (18:47 IST)

ரஜினி படத்தில் அருவி பட நடிகர்!

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் அருவி படத்தில் நடித்த மதன்குமார் நடிக்கிறார்.
 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
 
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். திரு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டோராடூனில் நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்தது.
 
இந்நிலையில், அருவி படத்தில் நடித்த மதன் குமார் இப்படத்தில் நடிப்பது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், தீரன்,அருவி திரைப்படங்களின் அங்கிகாரத்தை தொடர்ந்து பூமரங், கொரில்லா,வெல்வெட் நகரம், தலைப்பிடப்படாத இயக்குனர் பிஜு விஸ்வநாத் ஆகியோரின் படங்களை தொடர்ந்து, இன்று கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் அவர்களின் திரைப்படம் நடிக்கின்றேன். வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்றும் நண்பர்களின் ஆதரவை நல்குகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.