1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (18:51 IST)

ஹரி-அருண்விஜய் படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படத்தை ஹரி இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த படத்தின் நாயகியாக சமீபத்தில் பிரியா பவானி சங்கர் அறிவிக்கப்பட்டார் என்பதும் மேலும் வில்லன் வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்புக் கொண்டார் என்றும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தில் யோகிபாபு இணைந்துள்ளார். அருண் விஜய்யுடன் யோகிபாபு இணைந்துள்ளது குறித்த தகவலை இந்த படத்தின் படத்தயாரிப்பு நிறுவனமான டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் சற்றுமுன் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது