1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 30 ஜனவரி 2021 (09:37 IST)

அஜித்தை கேவலப்படுத்தி மாஸ்டரில் காட்சி! – கொந்தளித்த அஜித் ரசிகர்களால் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

நடிகர் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் படத்தில் அஜித்தை கிண்டல் செய்யும் வகையில் இடம்பெற்றுள்ளதாக ஒரு காட்சியை சுட்டிக்காட்டி அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் மாஸ்டர். இந்த படம் பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்த நிலையில் நேற்று அமேசான் ப்ரைமில் வெளியானது. இந்த படத்தின் ஒரு ஆக்‌ஷன் காட்சியில் ஒரு கடையில் ஒட்டப்பட்டிருக்கும் பத்திரிக்கை செய்தி விளம்பரத்தில் அஜித் குறித்த செய்தி ஒன்று உள்ளது.

அதில் “அஜித் குதித்தார் கால் சவ்வு கிழிந்தது” என உள்ளது. இதை வேண்டுமென்றே படத்தில் இடம்பெற செய்திருப்பதாகவும், அஜித் கடினப்பட்டு படங்களில் நடிப்பதை கிண்டல் செய்யும் வகையில் இருப்பதாகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதை குறிப்பிட்டு #எச்சநாய்விஜய் சென்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.