தடம் வசூல் இத்தனை கோடியா!! வெற்றிகண்ட அருண்விஜய்!!

Last Updated: வெள்ளி, 8 மார்ச் 2019 (11:52 IST)
தடம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
 
வித்தியாசமான கதையாம்சம் கொண்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனெக்கென தனி இடத்தைத் தக்க வைத்திருப்பவர் நடிகர் அருண்விஜய். 
 
இந்நிலையில் அருண்விஜய், மகிழ்திருமேனி கூட்டணியில் வெளியாகியிருக்கும்  `தடம்' க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் தான்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப், சோனியா அகர்வால், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
 
இப்படம் கடந்த 1ந் தேதி வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தற்போது வரை தமிழகத்தில் 10 கோடி வசூல் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரமும் எந்த ஒரு படமும் ரிலீசாகாததால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :