சன் டிவியில் ’சுந்தரி 2’ சீரியல் முடிவுக்கு வருகிறதா? ரசிகர்கள் சோகம்..!
சன் டிவியில் ஒளிபரப்பான "சுந்தரி" தொடர் முதல் பாகம் மூலம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, அதே நடிகர்களுடன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது, இது பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதல் பாகத்தில், கணவனால் துரோகம் செய்யப்பட்ட கிராமத்து பெண், போராடி கலெக்டர் ஆகிறார். இரண்டாம் பாகத்தில், கலெக்டர் ஆன பிறகு, தனது கணவரின் மற்றொரு மனைவியின் குடும்பத்தை ஏற்றுக்கொண்டு அவர் சந்திக்கும் சவால்களை மையமாக கொண்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
"சுந்தரி 2" தொடருக்கு ஒவ்வொரு வாரமும் டி ஆர் பி யில் முதல் 10 இடங்களில் இடம் கிடைத்து வரும் நிலையில், தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு, விரைவில் தொடரின் இறுதி எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளன என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
Edited by Siva