திரும்ப ‘பிசாசு 2’ படத்துக்காக ஷூட்டிங் நடத்த விரும்பும் மிஷ்கின்?
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிசாசு 2. 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு படத்துக்கும் இந்த படத்துக்கும் திரில்லர் என்பதைத் தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என்று மிஷ்கின் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டே முடிவடைந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் படம் ரிலீஸாகவில்லை.
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட படம் தயாரிப்பாளரின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக ரிலீஸாகவில்லை. இந்நிலையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ரிலீஸாகாமல் முடங்கிக் கிடக்கும் பிசாசு 2 படத்தை தற்போது ரிலீஸ் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மார்ச் மாதத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் அந்த படத்துக்காக 10 நாட்கள் ஷூட் செய்து சில காட்சிகளை இணைக்கவேண்டும் எனக் கேட்டுள்ளாராம். ஆனால் அதற்கு தயாரிப்பாளரின் பொருளாதார சூழல் ஒத்துழைக்காததால் அவர் வேண்டாம் எனக் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.