செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 9 அக்டோபர் 2024 (18:15 IST)

சீரியல் நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா.. வாய்ப்பு கிடைக்கவில்லையா?

பிரபல நடிகை தமன்னாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், அவர் ஒரு பாடலுக்கு நடனமாடி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது தமிழ் சின்னத்திரை நடிகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

நந்தினி, கண்ணான கண்ணே, மருமகள் உள்பட சில சீரியல்கள் நடித்தவர் நடிகர் ராகுல் ரவி, இவர் தமன்னாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து, அவருடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து, சின்னத்திரையில் பிரபலமான அவர் வெள்ளித்திரையிலும் ஜொலிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அஜித், விஜய், சூர்யா உள்பட பல பெரிய நடிகர்களுடன் நடித்த தமன்னா, தற்போது வாய்ப்புகள் கிடைக்காததால், சின்னத்திரை நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Edited by Siva