1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2017 (20:12 IST)

வெளியேறிய சுஜா; வெளியிட்ட பதிவு: யார் உண்மையானவர்கள்??

பிக்பாஸ் பொழுதுபோக்கு நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.


 
 
100 நாட்கள் வெளியுலக தொடர்பு இன்றி போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வருகின்றனர். இந்த போட்டியின் வெற்றியாளர் யார் என்பதற்கான விடை இன்னும் சில நாட்களில் வெளியாகிவிடும். 
 
இந்நிலையில், கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய சுஜா வருணி பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
இந்த பதிவில் பலருக்கு நன்றியையும், வீட்டிற்குள் யார் நேர்மையாக உள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அவரின் கடிதம் பின்வருமாறு....