செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2017 (12:48 IST)

கணேஷின் செயலை கிண்டல் செய்யும் சக போட்டியாளர்கள்

நடிகர் கமல்ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 100வது நாளை நெருங்கி வருகிறது. இன்னும் 8 நாட்களே உள்ள  நிலையில், அதில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி வருகிறது. ஆரம்பத்தில்  இருந்து நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

 
நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து சுஜா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் யார்  ஜெயிப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று புதிதாக வந்த  புரொமோவில் ஹரிஷ், ஆரவ், பிந்து மூவறும் கணேஷ் செய்த சில விஷயங்களை பேசி சிரித்துக் கொண்டு இருக்கின்றனர்.
 
அதில் கணேஷ் கன்பஷன் ரூமில் வாயிலில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும்போது, இடித்து கொள்கிறார். மேலும் பிஸ்கெட்டை நெற்றியில் வைத்து அதனை நாக்கால் சாப்பிட முயல்கிறார். இதனை கிண்டல் செய்து ஆரவ், ஹரிஷ், பிந்து ஆகியோர்  பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
 
இதனை பார்க்கும் போது இந்த வாரம் மிகவும் ஜாலியாக இருக்குமோ என்று தோன்றுகிறது. அதேசமயம்  அடுத்த ஞாயிறு இறுதிப் போட்டியில் நான்கு பேர் மட்டுமே இருப்பார்கள் என்ற நிலையில், போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.