1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2017 (18:55 IST)

நித்யா மேனன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம்

நித்யா மேனன் நடிக்கும் பல மொழிப் படத்துக்கு, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.


 

 
பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம், தற்போது கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கிறார். அக்ஷய் குமார் நடித்துவரும் ‘பத்மன்’ ஹிந்திப் படத்துக்கு தற்போது ஒளிப்பதிவு செய்துவரும் பி.சி.ஸ்ரீராம், அடுத்து கல்யாண் ராம் நடிக்கும் தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்து, பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், நித்யா மேனன் நடிக்கும் பல மொழிப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை, வி.கே.பிரகாஷ் இயக்குகிறார். இவர், மலையாளம் மற்றும் ஹிந்திப் படங்களை இயக்கியுள்ளார். கேரளாவில் தொடங்கும் இந்த படப்பிடிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.