புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 2 டிசம்பர் 2020 (07:49 IST)

தல பாலாஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சுசித்ரா!

தல பாலாஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சுசித்ரா!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜிக்கு இன்று பிறந்தநாளை அடுத்து சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர் சுசித்ரா தனது இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
 
ஹாப்பி பர்த்டே தல பாலாஜி என பதிவு செய்துள்ள சுசித்ரா,  உங்களுடைய இனிமையான கனவுகள் அனைத்தும் நிறைவேறும் என்றும் எனது வாழ்த்துக்கள் என்றும் பதிவு செய்துள்ளார் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே பாலாஜியும் சுசித்ராவின் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள் என்பதும் முதல்முறையாக சுசித்ரா வெளியேறும் போதுதான் பாலாஜி கண்கலங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னரும் சுசித்ரா அவ்வப்போது பாலாஜி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலாஜிக்கு சுசித்ரா பிறந்த நாள் வாழ்த்து குறித்த பதிவுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.