செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2020 (10:42 IST)

இதெல்லாம் பாலாஜிகிட்ட இல்ல கேட்கணும், ரியோவை கலாய்த்த ரம்யா!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த 2 நாட்களாக கால் சென்டர் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் ஏற்கனவே நான்கு ஜோடிகள் உரையாடல் முடித்துவிட்ட நிலையில் இன்று ரியோ மற்றும் ஆஜித் ஜோடிகள் உரையாடுகின்றனர் 
 
 
அப்பாவியான ஆஜித்துடன் வாய்ச்சவடால் ரியோவிடம் பிக்பாஸ் மாட்டி விட்டதை பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர். அடுக்கடுக்கான கேள்விகளை ரியோ கேட்டுக் கொண்டே செல்கிறார்.  இந்த வீட்டில் அன்பை எதிர்பார்ப்பது தவறா? இந்த வீட்டில் அன்புடன் நடந்தால் அது கூடாது என்று சொல்கிறார்களே அது சரியா? உங்களுக்கு அன்பு கிடைத்த போது நீங்கள் அதை ஏற்றுக் கொண்டீர்கள், ஆனால் அதே நேரத்தில் மற்றவர்கள் எதிர்பார்த்து கிடைக்கும் அன்பை ஏற்றுக் கொள்வது தவறா? என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்க அதற்கு என்ன பதில் சொல்வது என்று ஆஜித் திணறிக்கொண்டு இருக்கின்றார்.
 
இந்த நிலையில் இந்த உரையாடலை பார்த்துக் கொண்டிருக்கும் ரம்யா ’பாலாஜி கிட்ட கேட்க வேண்டிய கேள்வி எல்லாம் ஆஜித்திடம் கேட்கிறார் ரியோ கேட்கிறாரே என கிண்டலுடன் கலாய்க்கின்றார்.