சிம்புவின் ‘ஈஸ்வரன்’ டீசர் ரிலீசாகும் நேரம் அறிவிப்பு!
சிம்புவின் ஈஸ்வரன் டீசர் ரிலீசாகும் நேரம் அறிவிப்பு!
சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சற்று முன் மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஈஸ்வரன் படத்தின் டீஸர் நாளை அதிகாலை 4:32 வெளியாகும் என சிம்பு அறிவித்துள்ளார். 4:32 என்பது பிரம்ம முகூர்த்தம் என்பதால் அந்த நேரத்தில் டீசர் வெளியிடவிருப்பதாக சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள போஸ்டர் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஈஸ்வரன் என்ற சிவனுக்கு முக்கியமான பிரம்ம முகூர்த்தத்தில் இந்த டீசர் வெளியிடப்படுவதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன
சிம்பு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் சுசீந்திரன் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது