செக்க சிவந்த வானம்: சிம்புவின் கதாபாத்திரம் வெளியானது!
மணிரத்னர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் செக்க சிவந்த வானம். இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா, அதிதி ராவ் ஹைதேரி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் பற்றிய தகவல் மற்றும் ஓவ்வொரு கதாபாத்திரத்திற்கான போஸ்டரை வெளியிடப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி கதாபாத்திரங்கள் வெளியான நிலையில் சிம்புவின் கதாபாத்திரம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் ஏற்கனவே செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதோ சிம்புவின் கதாபாத்திர போஸ்டர்...