1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By V.M.
Last Updated : வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (11:27 IST)

ஏலியனாகி வயிறு குலுங்க சிரிக்க வைக்கப்போகும் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் காமெடி கதாபத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார். அவரது சமீபத்திய படங்களில் இயல்பான காமெடி அளவு  இருந்தாலும், முழுக்க முழுக்க கமர்ஷியலாக மாறி வருகிறது. 
உதாரணமாக ரெமோ, வேலைக்காரன் உள்ளிட்ட படங்கள் ஆக்சன் காட்சிகள் நிறைந்தவையாக இருந்தன. அடுத்து சிவாவின் நடிப்பில் வெளியாக உள்ள  சீமத்துரையும் ஆக்சன், காமெடி படமாக உருவாகியுள்ளது.  
 
இந்நிலையில் பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, தற்போது ராஜேஷ் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிவகார்த்திகேயன் படத்துக்கு அவர் முதல்முறையாக இசையமைக்க  உள்ளார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்நிலையில் ஆமிர் கான் ‘பி.கே’ இந்தி படத்தில் ஏற்று நடித்த ஏலியன் கதாபாத்திரம்  மற்றும் ‘2.0’ படத்தின் அக்சய்குமார் கதாபாத்திரம் போல, ஏலியன் போல சிவகார்த்திகேயன் ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கிறார். ராஜேஷ் இயக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான இந்தக் காட்சி தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. பொதுவாக காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து சிவகார்த்திகேயனும், ராஜேஷ்ம் படம் எடுப்பார்கள் என்பதால், இந்த ஏலியன் சண்டைக்காட்சி நிச்சயம் ரசிகர்களை வயிறு குழுங்க சிரிக்க வைக்கும் என  எதிர்பார்க்கலாம்.
 
இதற்கிடையே கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்திலும் சிவகார்த்திகேன் நடித்து வருகிறார். இரு படத்தின் ஷுட்டிங்கிலும் மாறி மாறி நடித்து வருகிறார்.