1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 14 பிப்ரவரி 2022 (18:18 IST)

அட்டகாசமான அரபுக்குத்து பாடல்: விஜய் ரசிகர்கள் குஷி!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இன்று காலை முதலே இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த பாடல் வெளியாகி உள்ளது. 
 
விஜய் மற்றும் பூஜா ஹெக்டே அட்டகாசமாக நடனமாடும் இந்த பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி குரலில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு நடன இயக்குனராக  ஜானி மாஸ்டர் பணியாற்றியுள்ளார் 
 
இந்த பாடல் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த திரைப்படத்தில் செல்வராகவன்,  யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் நெல்சன் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.