கல்லூரிகளில் தேசிய கீதம் கட்டாயம்; அரசு கறார்
மஹாராஷ்டிராவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தேசிய கீதம் கட்டாயம் என அம்மாநில சிவசேனா அரசு அறிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் தேசிய கீதம் பாடுவதை கட்டாயமாக்குவதற்கு ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் உதய் சமாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும் எனவும், சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளான வருகிற 19 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் எனவும் கூறியுள்ளார்.
கடந்த மாதம் மஹாராஷ்டிராவின் பள்ளிகளில் இந்திய அரசியலமைப்பின் முன்னுரையை வாசிப்பதை சிவசேனா அரசு அமலுக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.