விஜய்க்கு போட்டியாக பாடலை வெளியிடும் சிம்பு: கோலிவுட்டில் பரபரப்பு

vijay simbu
விஜய்க்கு போட்டியாக பாடலை வெளியிடும் சிம்பு
Last Modified வியாழன், 13 பிப்ரவரி 2020 (22:34 IST)
விஜய் நடித்துள்ள ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ’ஒரு குட்டி கதை’ என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பது அனைவரும் அறிந்ததே. விஜய்யே இந்த பாடலை பாடி இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது மட்டுமின்றி விஜய்க்கு சமீப காலமாக நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளை அடுத்து வெளியாக உள்ள பாடல் என்பதால் இந்த பாடலை அவரது ரசிகர்கள் சூப்பர் ஹிட்டாக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளனர்

இந்த நிலையில் நாளை மாலை விஜய் பாடல் வெளியாக உள்ள அதே 5 மணிக்கு சிம்பு பாடிய ஒரு பாடலும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரும்பு மனிதன் என்ற படத்திற்காக சிம்பு ஒரு பாடலை பாடி இருப்பதாகவும் ’டோன்ட் வொர்ரி புள்ளிங்க’ என்று தொடங்கும் இந்த பாடல், விஜய் பாடல் வெளியாகும் அதே தினம் அதே நேரத்தில் வெளியாக வேண்டும் என சிம்பு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது
எனவே நாளை மாலை 5 மணிக்கு விஜய் மற்றும் சிம்பு ஆகிய ஆகியோர் பாடிய இரண்டு பாடல்களும் வெளியாகவிருப்பதால் இருதரப்பு ரசிகர்களும் அவரவர் விருப்பத்திற்குரிய நடிகர் பாடிய பாடலை வரவேற்க ஆவலுடன் உள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் எந்த பாட்டு அதிகமாக வைரலாகவுள்ளது என்ற போட்டியும் இரு தரப்பின் ரசிகர்களிடையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :