1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (16:10 IST)

சேலை கட்டுவதை வீடியோவாக எடுத்து போட்ட ஸ்ரீரெட்டி!

நடிகை ஸ்ரீரெட்டி தான் சேலைக் கட்டும் வீடியோவை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் அவரை தெலுங்கு சினிமா உலகினர் ஓரங்கட்டிவிட சென்னைக்குள் தஞ்சம் புகுந்தார் ஸ்ரீரெட்டி. பின்னர் தமிழ் சினிமாவிலும் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் பற்றியும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார். மேலும் சக நடிகைகளையும் அவர் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் அவர் இப்போது சேலை கட்டும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த பலரும் ஸ்ரீரெட்டியைக் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.