திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (12:03 IST)

ஈபிஎஸ் - ஓபிஎஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வார்களா? விஜயபாஸ்கர் தகவல்

முதல்வர், துணை முதல்வருக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி கோரப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல். 

 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், மக்கள் கொரோனா தடுப்பூசிகளை கண்டு பயப்படுவதால் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.
 
இந்நிலையில் முதல்வர், துணை முதல்வருக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி கோரப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முதல்வர், துணை முதல்வர் மட்டுமின்றி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கும் தடுப்பூசி போட மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.