திங்கள், 20 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2024 (10:39 IST)

சமந்தா காட்டாத தாரளத்தை காட்டிய ஸ்ரீலீலா! ஒரு பாட்டுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Sree Leela vs Samantha

புஷ்பா 2 படத்தில் நடிகை ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள நிலையில் ரசிகர்களிடையே அது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளியாகி பெரும் ஹிட் அடித்த படம் புஷ்பா. இதன் இரண்டாம் பாகம் நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்து வந்த நிலையில் தற்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. டிசம்பர் 5ம் தேதி ‘புஷ்பா 2’ திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ப்ரொமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

 

புஷ்பா முதல் பாகத்தில் நடிகை சமந்தா ‘’ஊ சொல்றியா மாமா” என்ற ஒரு பாடலுக்கு செம க்ளாமராக டான்ஸ் ஆடியிருந்தார். அந்த சமயத்தில் மிகவும் ட்ரெண்டான அந்த பாடல் புஷ்பாவை மேலும் பிரபலமாக்கியது. இந்நிலையில் இரண்டாவது பாகத்திலும் அப்படியான ஒரு குத்தாட்ட பாடல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தெலுங்கும் இளம் நடிகை ஸ்ரீலீலா, புஷ்பா 2-ல் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
 

 

இந்த ஒரு பாடலில் நடனமாடுவதற்காக சம்பளத்திலும் தாராளம் காட்டியுள்ளார் ஸ்ரீலீலா. முதல் பாகத்தில் டான்ஸ் ஆடுவதற்காக சமந்தா ரூ.5 கோடி சம்பளம் பெற்றார். ஆனால் ஸ்ரீலீலா தனது டான்ஸுக்காக ரூ.2 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளாராம். புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலாவின் பாடல் மிகவும் ஹிட் அடிக்கும் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K