செவ்வாய், 29 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2024 (07:38 IST)

சமந்தாவுடனான அனைத்துப் புகைப்படங்களையும் நீக்கிய நாக சைதன்யா!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா 2021 ஆம் ஆண்டு அவரது காதல் கணவரான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். அது சம்மந்தமான பரபரப்புகள் இப்போதுதான் சற்றுத் தணிந்துள்ள நிலையில் இருவரும் தங்கள் தொழிலில் பிஸியாக உள்ளனர்.

இதற்கிடையில் நாக சைதன்யா விரைவில் சக நடிகையான சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யவுள்ளார். அவர்களுக்கு நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் சைதன்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தாவுடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார். ஏற்கனவே விவாகரத்தின் போது அவர்களின் திருமணப் புகைப்படங்களை எல்லாம் நீக்கியிருந்தார்.

அவையில்லாமல் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது, பட ப்ரமோஷன்களில் கலந்துகொண்டது போன்ற புகைப்படங்களை மட்டும் வைத்திருந்தார். இப்போது அவரின் திருமணத்தை முன்னிட்டு அவற்றையும் நீக்கியுள்ளார்.