வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 6 நவம்பர் 2024 (11:00 IST)

உடல் எடை குறித்த கேள்விக்கு சமந்தா ஆவேசப் பதில்!

சமந்தா தற்போது, பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இது ஏற்கனவே பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான சிட்டாடல் தொடரின் மேலோட்டமான ரீமேக் என சொல்லப்படுகிறது. இந்த தொடரில் கதாநாயகனாக வருண் தவான் நடித்து வருகிறார். இது தவிர அவர் கைவசம் படங்கள் எதுவும் இப்போது இல்லை.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். அதில் ஒரு ரசிகர் சமந்தாவிடம் “மேம் கொஞ்சம் உடல் எடை ஏற்றுங்கள்” எனக் கேட்டிருந்தார். அதற்கு சமந்தா ஆவேசமாக “எல்லோரும் என் உடல் எடை பற்றி பேசுகிறார்கள். நான் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும் ஆண்ட்டி இன்ப்ளோமெட்ரி வகை டயட்டில் இருக்கிறேன். நான் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் எனக்கிருக்கும் மையோசிட்டீஸ் பிரச்சனை அப்படிப்பட்ட தன்மை கொண்டது.

இது 2024 ஆம் ஆண்டு. அதனால் மற்றவர்களைக் குறித்து மதிப்பிடுவதைக் கைவிட்டு, அவர்களை அவர்களாகவே வாழவிடுங்கள்” எனக் கூறியுள்ளார். சமந்தா கடந்த சில ஆண்டுகளாக மையோசிட்டீஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.