1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2024 (09:34 IST)

ரஜினி ஸ்டைலில் நெல்சன்…பிளடி பெக்கர் விநியோகஸ்தருக்கு பணத்தை திருப்பி தருகிறாரா?

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனராக உருவாகியுள்ள நெல்சன் சமீபத்தில் ஒரு திரைப்பட நிறுவனத்தை தொடங்கிய அதன் முதல் படமாக கவின் நடிப்பில் பிளடி பெக்கர் என்ற படத்தைத் தயாரித்து தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்தார். சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், ஜென் மார்ட்டின் இசையில் உருவான இந்த படத்தில் கவின், ரெட்டின்ஸ் கிங்ஸி ஆகியோர் நடித்திருந்தார். டார்க் காமெடி வகையில் உருவாகி இருந்த படத்துக்கு நல்ல ப்ரமோஷன் செய்யப்பட்டதால் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் ரிலீஸுக்குப் பிறகு படம் சுத்தமாக ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. அதுமட்டுமில்லாமல் படம் சம்மந்தமாக ட்ரோல்களும் உருவாகின. ஒரு கட்டத்துக்கு மேல் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் படங்களின் வெற்றியால் இந்த படம் பற்றிய பேச்சே ரசிகர்களிடம் எழவில்லை.

இந்த படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தரான பைவ் ஸ்டார் செந்திலுக்கு 7 கோடி ரூபாய் வரை நஷ்டம் வரும் என திரையுலக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில் விநியோகஸ்தருக்கு ஏற்பட்ட அந்த பெரிய நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக தயாரிப்பாளர் நெல்சன் ஒரு கணிசமான தொகையை அவருக்குத் திருப்பி தர சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.