செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2024 (14:50 IST)

தாயாக வேண்டும் என்ற கனவு இன்னமும் உள்ளது… சமந்தா ஓபன் டாக்!

சமந்தா தற்போது, பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இது ஏற்கனவே பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான சிட்டாடல் தொடரின் மேலோட்டமான ரீமேக் என சொல்லப்படுகிறது. இந்த தொடரில் கதாநாயகனாக வருண் தவான் நடித்து வருகிறார். இது தவிர அவர் கைவசம் படங்கள் எதுவும் இப்போது இல்லை.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் “நான் தாயாவதற்கான காலம் தாமதமாகிவிட்டதாக நான் நினைக்கவில்லை. எனக்கு இன்னமும் தாயாக வேண்டும் என்ற கனவு உள்ளது. நான் எப்போதுமே தாயாக வேண்டும் என்ற ஆசையோடுதான் இருக்கிறேன். அது ஒரு அழகான அனுபவம். நான் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். அவர்களின் விவாகரத்துக்கு சொல்லப்பட்ட காரணங்களில் ஒன்று சமந்தா குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்பவில்லை என்பதுதான். அதற்கு விளக்கமளிப்பது போல சமந்தா இப்போது தன்னுடைய பதிலைக் கூறியுள்ளார்.