திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (10:27 IST)

எல்லா வில்லனும் வந்துட்டாங்க.. ஸ்பைடர்மேனை காணோமே! – வெளியானது ஸ்பைடர்மேன் இறுதி ட்ரெய்லர்!

சூப்பர்ஹீரோ பட ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் பட இறுதி ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் சூப்பர்ஹீரோ படங்களை தயாரித்து வெளியிட்டு பல கோடி ரசிகர்களை ஈட்டியுள்ள நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். மார்வெலின் ஷாங் சீ, இட்டர்னல்ஸ் உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம் டிசம்பரில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் டாம் ஹாலண்டுடன் பழைய ஸ்பைடர்மேன்களான டோபி மற்றும் கார்பீல்டு போன்றவர்களும் தோன்ற உள்ளதாக கூறப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இறுதி ட்ரெய்லர் தற்போது ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகியுள்ளது. ஸ்பைடர்மேனின் பரம எதிரிகளான ஆக்டோபஸ், சாண்ட் மேன், எலக்ட்ரோ, கோப்ளின் உள்ளிட்ட சினிஸ்டர் சிக்ஸ் வில்லன்கள் ட்ரெய்லரில் தோன்றியிருந்தாலும், டோபி மற்றும் கார்பீல்டு ஸ்பைடர்மேன்கள் குறித்த காட்சிகள் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும் கறுப்பு உடையணிந்த ஸ்பைடர்மேன் டோபியாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

ட்ரெய்லரை காண…