1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 13 நவம்பர் 2021 (18:38 IST)

ஹாலிவுட் படத்தின் சாதனையை முறியடித்த சூர்யாவின் படம்

நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படம் ஹாலிவுட் படத்தின் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளது.

நடிகர் சூர்யா நடித்து தயாரித்துள்ள படம் ஜெய்பீம். இப்படத்தை த.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர்களும், பிரபல இயக்குநர்களும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

சமீபத்தில் ஜெய்பீம் திரைப்படம் ஐஎம்டிபி (imdp) வலைதளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. பழங்குடி மக்களுக்கு போலீஸாரால் ஏற்பட்ட பாதிப்புகளை இப்படம் கூறுவதால் பலதரப்பினர் இடையே பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உலகப்புகழ்பெற்ற படமான ஜெய்பீம் படம் பிரபல ஹாலிவுட் படமான the Shawshank redemption என்ற  திரைப்படத்தின் சதனை முறியடித்து தற்போது   ஐஎம்டிபியின் உலகளாவிய தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.  இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.