வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 அக்டோபர் 2021 (18:16 IST)

துப்பாக்கி சூடு சம்பவம்… மன உளைச்சலால் படங்களை ரத்து செய்த நடிகர்!

ஹாலிவுட்டில் போலி துப்பாக்கியால் சுட்டதில் ஒளிப்பதிவாளர் மரணமடைந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அலெக் பால்ட்வின் நடிப்பில் உருவாகி வரும் 'ரஸ்ட்'. இவர் மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் போலியாக வைக்கப்பட்டு இருந்த துப்பாக்கி என நினைத்து பால்ட்வின் சுட்டதில் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சினஸ் மேல் குண்டு பாய்ந்து அவர் பலியாகியுள்ளார்.

இந்நிலையில் போலியான துப்பாக்கியில் இருந்து எப்படி குண்டு வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக போலிஸார் விசாரணை மேற்கொண்டு நடந்தது விபத்துதான் என்று அறிவித்துவிட்டாலும் நடிகர் பால்ட்வின் கடுமையான மன உளைச்சலில் உள்ளாராம். இதனால் தான் நடிக்க ஒப்பந்தம் ஆன அனைத்துப் படங்களையும் ரத்து செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சில காலம் அவர் தன் குடும்பத்தோடு நேரம் செலவிட விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.