திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (11:20 IST)

விஸ்வாசம் 8 நாளில் 125 கோடி சாத்தியமே – எப்படித் தெரியுமா ?

விஸ்வாசம் படம் 8 நாட்களில் 125 கோடி வசூலித்ததாக அதன் விநியோகஸ்தர் சொன்னது சாத்தியமானதே என சமூகவலைதளங்களில் ஒருப் புள்ளிவிவரம் உலாவர ஆரம்பித்துள்ளது.

இந்த ஆண்டுத் தொடக்கமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் தயாரிப்பாளர்கள், விநியோக்ஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் ஆகியோருக்கு நம்பிக்கி அளிக்கும் ஆண்டாகத் தொடங்கியுள்ளது. அதற்குக் காரணம் பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டுப் படங்களே. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி  பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் ரிலிஸாகின. இரண்டுப் படங்களுமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களைக் கொண்டவையாக இருந்ததனால் தமிழகம் முழுக்க உள்ள தியேட்டர்களை கிட்டத்தட்ட சமமாகப் பிரித்து ரிலிஸ் ஆகின. பொங்கல் பண்டிகை விடுமுறை இதுவரை இல்லாத அளவில் இல்லாத அள்விற்கு 10 நாட்கள் கிடைத்ததால் இரண்டு படங்களும் வசூல்மழைப் பொழிந்தன.

ஆனால் படம் ரிலிஸான அடுத்த நாளில் இருந்தே இரு நடிகர்களின் ரசிகர்களும் யார் படம் அதிக வசூல் செய்தது என்பதில் ஆரம்பித்து வைத்த சண்டை தயாரிப்பு நிறுவனங்கள் வரை சென்றது. சன்பிக்சர்ஸ் பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியனை வைத்து தங்கள் படமான பேட்ட யின் வசூலை உயர்த்திக் கூறி விளம்பரம் தேடிக் கொண்டது. பேட்ட படம் 11 நாள்களில் 100 கோடு வசூல் செய்து குறைந்த நாட்களில் 100 கோடி வசூலித்த படம் என்ற சாதனையை நிகழ்த்தும் என அறிவித்தார். ஆனால் அவருக்கு சொந்தமாக திருப்பூரில் உள்ள தியேட்டரிலேயே பேட்ட படத்தை விட விஸ்வாசம் படமே அதிக திரைகளில் ஓடுவதாக அஜித் ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.

சன்பிக்சர்ஸின் இந்த செயலுக்குப் பதில் கொடுக்கும் விதமாக விஸ்வாசம் படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுள்ள நிறுவனமாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் விஸ்வாசம் படம் தமிழகத்தில் 8 நாட்களிலேயே 125 கோடி வசூலித்ததாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இது அஜித் ரசிகர்களுக்கு காலில் சலங்கையைக் கட்டிவிட்டது. இதனால் சமூகவலைதளங்கள் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களின் புள்ளிவிவரக் கணக்குகளால் போர்க்களம் போலக் காட்சியளித்தது.

ஆனால் தமிழ் சினிமாவின் வர்த்தகத் தளங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட சிலர் 11 நாளில் 100 கோடி என்பதோ அல்லது 8 நாளில் 125 கோடி என்பதோ சாத்தியமே இல்லை எனக் கூறினர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக விஸ்வாசம் படத்தின் விஒநியோகஸ்தர் ‘யாருக்கு சந்தேகம் இருந்தாலும் அவர்கள் எங்கள் அலுவலகத்திற்கு வந்து வசூல் விவரங்கள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்’ எனக் கூறினார்.

இந்நிலையில் 8 நாளில் 125 கோடி வசூல் என்பது எப்படி சாத்தியம் எனப் பிரபல அஜித் ரசிகரும் சினிமாவில் கலர் கரெக்‌ஷன் பிரிவில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருபவருமான கணேசன் அன்பு நம்பகத்தனமான ஒருப் புள்ளி விவரத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இனி அவரின் புள்ளி விவரம் :-
விஸ்வாசம் : 8 நாட்களில் 125 கோடியும் & பாகுபலி 2 சாதனை முறியடிப்பும் !
விஸ்வாசம் படத்தின் தமிழக வசூல் பலருக்கும் வியப்பாகவே உள்ளது. பலரால் நம்பவும் முடியவில்லை. ஏற்கனவே ஒரு வீடியோவில் அதன் சாத்தியக்கூறுகளுக்கான லாஜிக் என்னவென்று சொல்லியும் இருந்தேன்.இப்ப எளிமையான ஒரு கணக்கை சொல்கிறேன்.தமிழகத்தில் சுமாராக 550 முதல் 600 அரங்குகளில் வெளியானது விஸ்வாசம். சில அரங்குகளில் பேட்ட விஸ்வாசம் பகிர்ந்தும் அளிக்கப்பட்டது. தோராயமாக 500 அரங்குகள் என்று கணக்கில் கொள்வோம். 150 , 200 இருக்கைகள் கொண்ட மல்டிபிலக்ஸ் மற்றும் 800, 900 என ஆயிரத்திற்கும் மேல் இருக்கைகள் கொண்ட பெருவாரியான சிங்கிள் ஸ்க்ரீன்களில் வெளியானது விஸ்வாசம்.

இப்ப தோராய கணக்குகள் மட்டும் பார்ப்போம்.ஒரு அரங்கின் தோராய இருக்கைகள் - 400 என்றே கணக்கில் கொள்வோம்.டிக்கெட் விலை தோராயமாக 150 என்று கணக்கில் கொள்வோம். ( ஊர்ல நான் பார்த்தபோது இரண்டு அரங்குகளில் 180 ரூபாய். ஒரு அரங்கில் 150 எனவும் இருந்தது ) ஆக, 400 இருக்கைகள் × 150 = 60,000.ஒரு அரங்கில் ஒரு ஷோவுக்கு 60 ஆயிரம் வசூல். நான்கு காட்சிகள் கணக்கில் கொண்டால் 4 × 60000 = 2,40,000 /-. இப்போது மொத்த அரங்குகள் கணக்கு பார்த்தோமேயானால் 500 × 240000 = 12 கோடி !

ஒரு நாள் சராசரி தோராய வசூல் 12 கோடி.( முதல் நாள் வசூல் இதைக்காட்டிலும் மிக கூடுதல். இது தோராய கணக்கு மட்டுமே )இந்த 12 கோடி என்பது எளிமையான நடைமுறையில் சாத்தியமான வசூலே !.8 நாட்களில் 125 கோடி எப்படி சாத்தியம்? நம்ம எளிமையான கணக்குப்படி பார்த்தாலே 8 நாட்கள் × 12 கோடி = 96 கோடி வருகிறது அல்லவா?.. 125 - 96 = 29 கோடி உதைக்கிறது .  சரி ; இன்னும் நுட்பமாக பார்ப்போம்.

* ஒரு நாளைக்கு 4 காட்சிகள் மட்டுமே கணக்கில் கொண்டுள்ளோம்.

* பெருவாரியான அரங்குகளில் ஸ்பெஷல் ஷோக்கள் போட்டு 5 அல்லது 6 காட்சிகள் திரையிடப்பட்டன.

* அதுபோலவே பெருவாரியான அரங்குகளில் கூடுதலாக நாற்காலிகள் போடப்பட்டு வசூலை அள்ளினார்கள்.

* மிக முக்கியமாக, பண்டிகைக் காலம். எட்டு நாட்களில் 6 நாட்கள் விடுமுறை நாட்கள். கிட்டத்தட்ட அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்.

* நாம் கணக்கில் கொண்ட ஆவ்ரேஜ் டிக்கெட் விலை 150 ரூபாய். ஆனால் அதைக் காட்டிலும் சராசரி டிக்கெட் விலை கூடுதலே !

* தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளில் இதற்கு முன்பு எந்தப் படத்திற்கும் இப்படி 6 நாட்கள் விடுமுறை கிடைத்ததும் இல்லை. அப்படி கிடைத்தாலும் குடும்பங்கள் சகிதமாக திரை அரங்குகளுக்கு படையெடுத்ததும் இல்லை.

* இன்னொரு முக்கிய விஷயம், சமீபத்தில் வெளியான பெரிய படங்களான 2.0, காலா, சர்க்கார், மெர்சல் போன்றவற்றைக் காட்டிலும் இப்போது gst குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது !

ஆக, கணக்கில் உதைத்த 29 கோடிகளும் தர்க்க ரீதியாக சாத்தியப்படக் கூடியவையே !
அந்த எட்டு நாட்களுக்குப் பிறகும் விஸ்வாசம் தமிழகம் முழுக்க நன்றாக ஓடிக்கொண்டிருப்பதும் உண்மையே...  குறிப்பாக நேற்றைய வார இறுதி, மற்றும் ஜனவரி 26, 27 வார இறுதிகளில் தமிழகம் முழுக்கவே ஹவுஸ்ஃபுல் ஷோக்களாக ஓடின. பல திரையரங்குகளின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் ஐடி-கள் மற்றும் விநியோகஸ்தர்கள் விஸ்வாசம் திரைப்படம் அதற்கு முந்தைய அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்துவிட்டதாக பெருமையுடன் தகவலைப் பகிர்ந்து வருகின்றனர். ஆக, ஒட்டுமொத்த அளவில் இந்த 25 நாட்களில் பாகுபலி 2 படத்தின் தமிழக வசூலைத் தகர்த்திருக்கும் என்பதும் நம்பத்தகுந்ததே !