ரஜினியின் கருத்துக்கு இளையராஜா மறுப்பு
நேற்று இரண்டாவது நாளாக நடந்த 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், "இளையராஜாவின் திறமை கடவுளின் ஆசீர்வாதம், இளையராஜா. இசையின் சுயம்பு லிங்கமாக இருக்கிறார் இளையராஜா. அந்த சக்தி ‘அன்னக்கிளி’ மூலம் அறிமுகமாகி இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது
ரமண மகரிஷியை எனக்கு அறிமுகப்படுத்தியது இளையராஜா தான். ஒரு நாள் அவரை காணும்போது எனக்கு சாமி என்று அழைக்க தோன்றியது. அன்று முதல் நான் அவரை சாமி என்று அழைப்பேன். அதேபோல் அவரும் என்னை சாமி என்று தான் அழைப்பார்.
70, 80களில் பண்டிகை நாட்களில் 12 படங்கள் வெளியாகும். அதில் 10 படங்கள் இளையராஜா இசையில் தான் வெளியாகும். ஒரே நாளில் தூக்கமில்லாமல் மூன்று படங்களுக்கு ரீரெக்கார்டிங் செய்திருக்கிறார். அவர் ரீரெக்கார்டிங் செய்தாலே படம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருந்தது. அவர் இசையமைத்து வெற்றி பெற்ற படங்கள் எத்தனையோ உள்ளன. பல தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்காமலே இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.
என்னுடைய படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்குத்தான் இளையராஜா நன்றாக இசையமைத்துள்ளார் என ரஜினிகாந்த் கூறினார். இந்த கருத்தை மறுத்த இளையராஜா, என்னை பொறுத்தவரை இசை தான் பிரதானம். அப்படி பார்த்தால் ராமராஜன் படங்களுக்கு அதைவிட நன்றாக இசையமைத்துள்ளேன் என்றார்.