செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 30 நவம்பர் 2019 (12:30 IST)

தலைவர் 168 படத்தில் இணைந்த பிரபலம் - வெளியானது சிறப்பு தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் புதுப்படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்காலிகமாக தலைவர் 168 என அழைக்கப்படும் இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தின் கடைசிகட்ட வேளைகளில் பிஸியாக இருந்து வருகிறார். நேற்று "தர்பார்" படத்தில் இடம்பெறவுள்ள "சும்மா கிழி" என்ற லிரிகள் வீடியோ வெளியாகி நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு கொண்டாட்டமாக தலைவர் 168 படத்தின் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. 
 
நேற்று இப்படத்தில் நடிகர் சூரி  இணைத்திருப்பதாக தயாரிப்பு தரப்பில் இருந்து தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக  திலீப் சுப்பராயன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினி நடித்த காலா படத்திற்கும் இவர் தான் ஸ்டண்ட் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.