செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2020 (09:13 IST)

நடிகர் சூரியிடம் ரூ.2.7 கோடி மோசடி: தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரியிடம் தயாரிப்பாளர் ஒருவர் ரூபாய் 2.7 கோடி மோசடி செய்ததாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
நடிகர் சூரியிடம் கடந்த 2015 ஆம் ஆண்டு ’வீர தீர சூரன்’ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக 40 லட்சம் சம்பளம் பாக்கி இருந்ததாக தெரிகிறது. சம்பள பாக்கியை தயாரிப்பாளர் அன்புராஜன் மட்டும் ரமேஷ் ஆகியோர் த மறுப்பதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் நடிகர் சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் தயாரிப்பாளர் மோசடி செய்துள்ளதாகவும், மோசடி செய்த அந்த தயாரிப்பாளர் மீது சூரி கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது
 
மேலும் நடிகர் சூரி அளித்த புகாரில் அடிப்படையில் அடையாறு காவல் நிலைய காவல் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் இந்த மோசடிக்கு பின்னணியில் மேலும் சிலர் இருப்பதாக நம்பப்படுவதால் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது