விஜய், விக்ரம் பட நடிகை கார் ஓட்டுநர் மீது புகார் !

mumait khan
Sinoj| Last Modified வெள்ளி, 2 அக்டோபர் 2020 (22:50 IST)

எம்பேரு மீனாகுமாரி (கந்தசாமி), என் செல்லப் பேரு ஆப்பிள்( போக்கிரி) போன்ற படங்களில் நடித்துள்ளவர் நடிகை முமைத்கான்.

இவர் கார் ஓட்டுநரின் மீது புகார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் முமைத்தான் கோவா செல்ல வேண்டுமென
ஒரு காரை புக் செய்துள்ளார். அதன்படி ஓட்டுநர் காரை ஓட்டியுள்ளார்.

இதனையடுத்து ஓட்டுநர்
நடிகை மீது பரபரப்பான புகாரை தெரிவித்தார். அதில் 3 நாட்களுக்குப் பதிலான 8 நாட்கள் ஆக்கிவிட்டு நடிகை ரூ.15000 தராமல் ஏமாற்றியதாக ஓட்டுநர் தெரிவித்து அவருடம் எடுத்துள்ள போடோக்களை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கேள்விப்பட்ட முமைத்கான் அந்த ஓட்டுநருக்கு தான் கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுத்துவிட்டதாகவும், தனக்கு அவப்பெயர் ஏற்படுத்த அவர் பொய்யான புகார் கொடுத்துள்ளதாக குறி அவர் மீது போலீசில் புகார் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
போலீசார் விசாரணையில்தான் இருவரில் யாரை யார் ஏமாற்றியது? என்ற உண்மை வெளிவரும் எனத் தெரிகிறது.
இதில் மேலும் படிக்கவும் :