செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2020 (13:45 IST)

உயிர் மூச்சு உள்ளவரை உதவிக்கிட்டே இருப்பேன்! – சோனு சூட் நெகிழ்ச்சி!

கடந்த ஒரு வருடத்திற்குள்ளாக நாட்டின் பல மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ள சோனு சூட் தனக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இந்திய சினிமாவில் வில்லன் நடிகராக புகழ்பெற்றவர் சோனுசூட். படத்தில் வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மக்களிடையே பெரும் ஹீரோவாக மாறியுள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் வீடு திரும்ப உதவியது, ஏழை விவசாயிக்கு ட்ராக்டர் வாங்கி கொடுத்தது, அனாதை குழந்தைகளை தத்தெடுத்தது என இவர் மேற்கொண்டவை ஏராளம்.

இதனால் மக்களின் இடையே பெரும் ஹீரோவாய் நிற்கும் சோனுவுக்கு ஆசியாவில் சிறந்த 50 பிரபலங்கள் பட்டியலில் முதல் இடம் கிடைத்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள சோனு சூட் ”கொரோனா தொற்றின் போது எந்நாட்டு மக்களுக்கு உதவ வேண்டியது எனது கடமை என புரிந்து கொண்டேன். ஒரு இந்தியனாக என்னுடைய கடமையைதான் செய்தேன். என்னுடைய கடைசி மூச்சு உள்ளவரை இதை நிறுத்த மாட்டேன்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.