திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2020 (10:47 IST)

உதவி செய்வதற்காக சொத்துகளை அடமானம் வைத்த சோனு சூட் – இணையத்தில் பெரும் பாராட்டு!

நடிகர் சோனு சூட் தனது 8 சொத்துகளை வங்கிகளில் 10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் முதல் வேலையில்லாத தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் உதவி செய்து மக்கள் மனதில் ஹீரோவாகியுள்ளார் வில்லன் நடிகர் சோனு சூட். கடந்த 6 மாதங்களாக அவர் செய்த சேவையால் சினிமா நடிகர்கள் மத்தியிலேயே கூட அவருக்கு மரியாதை அதிகமாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளங்கள் மூலமாக தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு எல்லாம் செய்துகொடுத்து வருகிறார் சோனு சூட்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த அவரை அம்மாநிலத்தின் அடையாளமாக ஐகானாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். இந்நிலையில் சோனு சூட் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக தனது 8 சொத்துகளை வங்கிகளில் 10 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார் என்ற செய்தி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அவருக்கு மேலும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.