திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 14 ஜூன் 2018 (18:58 IST)

நஸ்ரியா ரீஎண்ட்ரி: ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல் டீசர் ரிலீஸ்!

நடிகை நஸ்ரியா சினிமாவில் மறக்க முடியாத நாயகி. குறுகிய காலத்தில் நடித்த சில  படங்களிலேயே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். 
 
கடந்த 2014 ஆம் ஆண்டு மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலைத் திருமணம் செய்துகொண்ட பின்னர் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார் நஸ்ரியா. அவ்வப்போது அவர் மீண்டும் நடிக்க வருகிறார் என்ற வசந்திகளும் வந்தது. 
 
ஆனால், ஒரு கட்டத்தில் இது உறுதியானது. ஆம், பெங்களூர் டேஸ் படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்கும் கூடே மலையாள படத்தில் பிரித்வி ராஜ் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் நஸ்ரியா ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். பார்வதியும் இந்த படத்தில் நடித்துள்ளார்.
 
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கூடே திரைப்படத்தில் நஸ்ரியா இடம்பெற்றுள்ள ஆராரோ என்ற பாடலின் டீசரும் வெளியாகியுள்ளது. இதோ அதன் வீடியோ...