வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (19:51 IST)

மீண்டும் இணையும் கமல்-விஜய்சேதுபதி; இயக்குனர் இவர்தான்!

kamal
மீண்டும் இணையும் கமல்-விஜய்சேதுபதி; இயக்குனர் இவர்தான்!
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாகவும் துணிவு படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது 
 
கமல்ஹாசனின் 233 ஆவது படமாக உருவாக இருக்கும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இதனை அடுத்து கமல்ஹாசனின் 234 வது படத்தை மணிரத்னம் இயக்க இருக்கிறார் என்பதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பதும் தெரிந்ததே
 
Edited by Mahendran