திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (13:24 IST)

நாடாளுமன்ற தேர்தல்: தனியார் ஹோட்டலில் கமல்ஹாசன் தீவிர ஆலோசனை!

kamal
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அதிமுக கூட்டணி மற்றும் திமுக கூட்டணி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன
 
குறிப்பாக பாஜக இந்த தேர்தலில் குறைந்தது 7 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவும் தேர்தலுக்கு கட்சியை தயார் செய்யும் வகையிலும் கமல்ஹாசன் சென்னை தனியார் ஓட்டலில் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது 
 
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியின் நிர்வாகிகளும் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் தீவிர கலந்துரையாடி வருவதாக சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது
 
கடந்த சில மாதங்களாக திமுகவுடன் கமல்ஹாசன் நெருக்கமாக இருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் அவரது கட்சி இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran