செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 15 நவம்பர் 2022 (16:01 IST)

ஆர்யா முத்தையா கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு இதுவா? கசிந்த தகவல்!

சசிக்குமார் நடித்த குட்டிப் புலி மற்றும்  கார்த்தி நடித்த கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன.

சமீபத்தில் அவர் இயக்கிய விருமன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து ஆர்யாவை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு ‘காதர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க உள்ளார்.