செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 13 நவம்பர் 2022 (15:11 IST)

இளமை இதோ இதோ… கமல்ஹாசனில் லேட்டஸ்ட் யூத்ஃபுல் புகைப்படம்!

கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 ஷூட்டிங், பிக்பாஸ் நிகழ்ச்சி என பயங்கர பிஸியாக இருக்கிறார்.

நடிகராக, தயாரிப்பாளராக, கவிஞராக, பாடகராக, இயக்குனராக, அரசியல்வாதியாக இன்னும் பலவாக தமிழ் சினிமாவின் முக்கியமான அடையாளமாக இருப்பவர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் ‘விக்ரம்’ வரை ஏராளமான படங்களை நடித்துள்ளதுடன், கோலிவுட்டை மற்ற மொழி திரையுலகம் வியந்து பார்க்கும் வகையிலான பரிசோதனை முயற்சிகளையும் செய்துள்ளார்.

அதையடுத்து இப்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும் இளம் இயக்குனர்களான பா ரஞ்சித், ஹெச் வினோத், வெற்றிமாறன் ஆகியோர் அடுத்தடுத்து அவரை இயக்க உள்ளனர்.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது