வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 29 செப்டம்பர் 2021 (19:23 IST)

சினேகன் - சாக்சி அகர்வால் ஜோடி சேரும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

சினேகன் - சாக்சி அகர்வால் ஜோடி சேரும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற பல போட்டியாளர்களும் திரையுலகில் வாய்ப்புகளை பெற்று  வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்ட கவிஞர் சினேகன் மற்றும் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்ட நடிகை சாக்ஷி அகர்வால் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ’குறுக்குவழி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இந்த திரைப்படத்தில் இளம் நடிகர் நடிகைகள் பலர் நடிக்க உள்ளனர் என்பதும் இந்த திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
என்டி நந்தா என்பவர் இந்த திரைப்படத்தை இயக்க உள்ள நிலையில் இந்த படம் ஒரு காதல் படம் என்றும் இந்த படத்தில் சினேகன், சாக்ஷி அகர்வால் ஜோடியை தவிர மேலும் ஒரு இளம் ஜோடி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
சினேகன் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் சாக்ஷி அகர்வால் அரண்மனை 3  உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது