1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 25 அக்டோபர் 2021 (11:42 IST)

சினேகனுக்கு தங்க மோதிரம் பரிசளித்த இளையராஜா!

கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து பின் பாண்டவர் பூமி படத்தில் அனைத்துப் பாடல்களும் எழுதியதன் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் சினேகன். இவர் சாமி, சூரரைப் போற்று, ராம் உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். பின்னர் பிக்பாஸ் 1 சீசனில் இவர் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். அதையடுத்து அரசியலில் இறங்கி மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளார். 
இவர் கடந்த ஜூலை மாதம் தனது நீண்ட நாள் காதலியான கன்னிகா ரவியை திருமணம் செய்துக்கொண்டார் . இந்த திருமணத்தை கமல் ஹாசன் தாலி எடுத்து கொடுத்து திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில் திருமணத்தில் பங்கேற்க முடியாததால் சினேகனை நேரில் அழைத்து அவருக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அவருக்கு நன்றி கூறியுள்ளார்.