புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 11 ஆகஸ்ட் 2021 (16:19 IST)

ஜோடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறாரா சினேகன்!

சினிமா பாடலாசிரியர் சினேகன் தனது மனைவி கன்னிகாவோடு பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் நடிகை கன்னிகா ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவர் கவிஞர் சினேகனை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார் என்றும் செய்திகள் வெளியானது. அந்த செய்திகளை உண்மையாக்கும் விதமாக இவர்களது திருமணம் கடந்த 29 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக கன்னிகா விஜய் தொலைக்காட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.