1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (08:13 IST)

ஒலிவியா மோரிஸ் அல்ல, இவர்தான் ‘எஸ்.கே.20’ படத்தின் நாயகி!

ஒலிவியா மோரிஸ் அல்ல, இவர்தான் ‘எஸ்.கே.20’ படத்தின் நாயகி!
சிவகார்த்திகேயன் நடித்து வரும் 20வது படத்தின் நாயகி ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடித்த ஒலிவியா மோரிஸ் என்று செய்திகள் வெளியானது
 
ஆனால் தற்போது வந்த செய்திகளின் படி ஒலிவியா மோரிஸ் நாயகி அல்ல என்றும் மரியா போஷாப்கா என்பவர் தான் நாயகி என்றும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ’ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5’ என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார் என்பதும் இவர் சிவகார்த்திகேயனின் இன்ஸ்டாகிராமை ஃபாலோ செய்யும் ஒரு நபர் என்றும் தெரியவந்துள்ளது 
 
 மரியா போஷாப்கா என்பவர்தான்  ‘எஸ்.கே.20’ படத்தின் ஹீரோயின் என்பது கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது