1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 12 பிப்ரவரி 2022 (09:43 IST)

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் பட நாயகி!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கி நடந்து வருகிறது.

சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் – தெலுங்கில் உருவாகும் இருமொழிப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க உள்ளார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடக்க உள்ளது.

இதுவரை இந்த படத்தின் கதாநயகி யார் என்ற அறிவிப்பைப் படக்குழு வெளியிடவில்லை. அதற்குக் காரணம் கதையின் படி நாயகி வெளிநாட்டைச் சேர்ந்தவராம். அதனால் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு நடிகையையே நடிக்க வைக்கவேண்டும் என படக்குழு விரும்பியதாம். அதனால் இப்போது ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்துள்ள வெளிநாட்டு நடிகை ஒலிவியா மோரிசை ஒப்பந்தம் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.