செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 நவம்பர் 2018 (16:59 IST)

சிவா மாமாவுக்காக பாட்டு பாடிய வாயாடி - அசந்து போன சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் 'கனா'.ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.
 
இதில் இடம்பெரும் வாயாடி பெத்தபுள்ள என்ற பாடலை சிவகார்த்திகேயனும், அவரது மகள் ஆராதனாவும் இணைந்து பாடினர். அந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது 
 
இந்நிலையில் தற்போது இந்த  பாடலை ஒரு குட்டி பாப்பா அழகாக பாடிய வீடியோவை இணையத்தில் வைரலாகியுள்ளது மேலும்  அந்த பாடலை கேட்ட  சிவகார்த்திகேயன் அசந்து போயுள்ளார் .
 
ரஜினி விஜய்க்கு அடுத்து குட்டீஸ்களின் விருப்பமான நடிகராகிவிட்டார் சிவகார்த்திகேயன். 
 
இந்நிலையில் வாயாடி பெத்தப்புள்ள பாடலை ஒரு குட்டிப்பிள்ளை அழகாக பாடிய வீடியோவை ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 
 
 
அந்த வீடியோவில் அந்த குட்டிப்பிள்ளை பாட, அண்ணன் வாயால் மியூசிக் போடுகிறார். சிவா மாமா இந்த பாட்டு உங்களுக்கு தான் என்று அந்த பொடியன் கூறி ஆரம்பிக்கும் அந்த  வீடியோவை சிவகார்த்திகேயன் பார்த்துள்ளார். படத்தில் தன் மகள் ஆராத்யாவுடன் சேர்ந்து தான் பாடிய பாடலை அந்த குட்டி பாடியதை பார்த்த சிவா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, 
 
ரெண்டு பேரும் சூப்பர். இந்த க்யூட் வீடியோவுக்காக இந்த குழந்தைகளுக்கு நன்றி என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.