விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்போது வெள்ளித் திரையிலும் ஓரு சில படங்களில் நடித்து வருகிறார்.
கஜா புயலினால் காற்றில் பறந்த நாகை, காரைக்கால், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் எண்ணற்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.
மேலும் அப்பகுதி மக்கள் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை அறந்தாங்கி நிஷா செய்து வருகிறார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரண உதவி செய்கிறதோ இல்லையோ, நாமே களத்தில் இறங்கி எம் மக்களுக்கு கை கொடுக்கலாம் என்று தனியார் அமைப்புகள் முதல் தனி நபர் வரை கிளம்பி விட்டார்கள்.
அந்த வகையில் அறந்தாங்கி நிஷா சமீபத்தில் தன் ரசிகர்களிடம் உதவி கேட்டு உருக்கமாக வீடியோ ஒன்றை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
தன்னால் முடிந்த உதவியை செய்ததோடு, உதவி செய்ய முன்வருபர்களையும் ஊக்கப்படுத்தி நிவாரண பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று சேர்த்தார் நிஷா.
நிஷாவின் இந்த உதவி மனப்பான்மையை பலரும் பாராட்டி உதவி செய்ய முன்வந்தனர்.
ஒரு சில ரசிகர்கள் காமெடி பண்ற உங்களுக்குள்ளும் இப்படி ஒரு நல்ல மனசு இருக்கறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கு நிஷா அக்கா என புகழ்ந்தனர்.
ஆனால் ஒரு ரசிகர் செய்த செயல் நிஷாவிற்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்திவிட்டது. நிஷாவின் வீடியோவை பார்த்து "பிச்சை எடுக்கிறீர்களா" என நக்கலான கருத்தை ரசிகர் ஒருவர் பதிவு செய்து நிஷா காயப்படுத்தியுள்ளார். அந்த நபரை பலரும் கடுமையாக திட்டி தீர்த்தனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் நிஷா அதை பற்றி மன வருத்ததுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது,
ஒரு அன்பு தம்பி , என்மேல் மிகவும் பாசமாக இருக்கும் அன்பு தம்பி அக்கா பிச்சை எடுக்கிறீங்களா என கம்மெண்ட்ஸ் செய்திருந்தார். அந்த தம்பியை மட்டுமின்றி அதுமாதிரி நினைக்கிற மற்ற தம்பிகளுக்கும் தான் இந்த வீடியோ.
" சாப்பாடு , அரிசி , பருப்பு இதையெல்லாம் நமக்கு பிச்சை போட்டவர்களுக்கு தான் நான் இப்போது பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறேன். அதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை, அதனால் நான் தைரியமா சொல்வேன் நான் பிச்சை தான் எடுக்கிறேன் .
" 2017 காலக்கட்டங்களில் நான் பட்டிமன்றத்தில் பேசினேன் அப்போ ரூ 500 , ரூ 1000 என எனக்கு கொடுத்து உதவியவர்கள் தான் இப்பொது கஜா புயல் பாதிப்பால் உடைமைகளை இழந்து தத்தளித்து வருகின்றனர்.
வேதாரண்யம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி கிட்டத்தட்ட எல்லா கிராம மக்களும் கொடுத்த பணத்தில் தான் என் குடும்பம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அதனால் தயவு செய்து வார்த்தைகள் விடாதீர்கள், உங்களால் முடிந்த அளவிற்கு உதவி செயுள்ளங்கள், முடியவில்லை என்றால் ஒதுங்கிவிடுங்கள் என்று தன் மனதை காயப்படுத்திய ரசிகருக்கு அறந்தாங்கி நிஷா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.