இந்த சாதனைக்கு பின்னால் ஆராதனாவின் காந்தக்குரல் இருக்கு

VM| Last Updated: வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (20:06 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் காமராஜ் இயக்கியுள்ள படம் கனா. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ளார். சத்யராஜ் விவசாயியாக நடித்துள்ளார். 
 
ஒரு சாதாரண விவசாயி மகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதுதான் கதை. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா வாயாடி பெத்த பிள்ள, என்ற பாடலின் முதல் நான்கு வரியை பாடினார். இவருடன் இணைந்து சிவகார்த்திகேயன் மற்றும் வைக்கம் விஜயலட்சுமி ஆகியோர் பாடலை பாடியிருந்தனர். 
 
இந்நிலையில் வாயாடி பெத்த புள்ள பாடல் பயங்கர ஹிட் அடித்துள்ளது. சமூக வலைதளங்களில் முழுமையாக ஆராதனாவின் காந்த குரலே காணப்படுகிறது. பாடல் வெளியான ஆறு நாட்களுக்குள்ளாக ஒரு கோடியே 20 லட்சம் பேர் யூடியூபில் பார்த்து ரசித்துள்ளனர். ஜிகேபி இந்த பாடலை எழுதி இருந்தார். 


இதில் மேலும் படிக்கவும் :