சினிமாவை விட்டு விலக நினைத்தேன்…என் மனைவிதான் என்னைத் தேற்றினார் –சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!
தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் சிவகார்த்திகேயன் அடைந்த வளர்ச்சி என்பது யாராலும் நம்ப முடியாதது. எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நுழைந்த அவர் தற்போது ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
சமீபத்தில் அவர் நடித்த அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துக் கலக்கியது. இதன் மூலம் தமிழைத் தாண்டியும் தெலுங்கு மற்றும் இந்தி மொழி ரசிகர்களிடம் அவர் கவனம் பெறுள்ளார். அதுபோலவே சமீபகாலமாக அவர் பேன் இந்தியா ஹீரோவாகும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் விரைவில் இந்தி படத்தில் நடிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “3 ஆண்டுகளுக்கு முன்னால் நான் சினிமாவை விட்டு விலகிவிடலாம் என நினைத்தேன். எனக்கு வரும் அழுத்தம் என் குடும்பத்தினரையும் பாதிக்கக் கூடாது என நினைத்தேன். அப்போது என் மனைவிதான் கடந்த இரு தசாப்தங்களில் அஜித், விக்ரம் தவிர்த்து எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவில் சாதித்தது நீங்கள்தான் எனக் கூறி என்னை தேற்றினார்.” எனக் கூறியுள்ளார்.